அமித் வீரசிங்கவை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

🕔 May 15, 2019

ஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று தெல்தெனிய பிரதேசத்தில் வைத்து விஷேட பொலிஸ் குழுவினர் இவரை கைது செய்தனர்.

இந்த நிலையில், அமித் வீரசிங்கவை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார். 

கடந்த தினங்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்பான செய்தி: வன்முறைகளுடன் தொடர்புடைய அமித் வீரசிங்க, நாமல் குமார கைது

Comments