“அது எடிட் செய்யப்பட்ட படம்”: விமல்

🕔 April 11, 2019
மெரிக்காவில் வர்த்தகக் கட்டிடத் தொகுதியொன்றின் வாகனத் தரிப்பிடத்தில் கோதாபய ராஜபக்ஷவுக்கு ஆவணமொன்றை வழங்குவதைப் போன்று வெளியாகியுள்ள புகைப்படம், எடிட் செய்யப்பட்டதொன்று என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அழைப்பாணை விடுவிக்கப்பட வேண்டுமாயின், தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முதலில் நீதிமன்றம் ஏற்க வேண்டும் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் குற்றச் செயல் ஒன்று குறித்து விசாரிக்க அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று, அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தால், லசந்த விக்ரதுங்கவின் மகள் அபிமிசா விக்ரமதுங்கவிற்கு என்ன சொல்வது என்று தெரியாது என்றும் விமல் வீரவங்ச மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கோதாபய ராஜபக்சவிற்கு எவ்வித அழைப்பாணையும் வழஙகப்படவில்லை எனவும் விமல் வீரவங்ச மீண்டும் தெரிவித்திருக்கிறார்.

(செய்தி மூலம்: LNW)

தொடர்பான செய்தி: கோட்டாவுக்கு எதிரான வழக்கின் ஆவணங்கள் கையளிக்கப்படும் படம் வெளியானது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்