தூபியில் ஏறி படம் எடுத்த தெ.கி.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்க மறியல்

🕔 January 24, 2019

தொன்மைமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாணவர்களை  பெப்ரவரி 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்படி மாணவர்களை கைது செய்த ஹொரவபொத்தான பொலிஸார், கெட்பிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ஆஜர் செய்தனர்.

குறித்த புகைப்படங்களை, மேற்படி மாணவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

இம்மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, குறித்த புகைப்படங்கள் கடந்த வருடம் ஜனவரி மாதம் 05ஆம் திகதியன்று எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாணவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களாவர்.

தொல்லியல் திணைக்களம் செய்த முறைப்பாட்டையடுத்து, 08 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Comments