அர்ஜுன மகேந்திரனுக்கு ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சின் செயலாளர் பதவி வழங்க திட்டம்

🕔 December 7, 2018

 த்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சரின் செயலாளர் பதவி வழங்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைறெ்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது அவர் இதனைக் கூறினார்.

“தற்போதுள்ள அரசியல் கொந்தளிப்பினை ஐக்கிய தேசியக் கட்சியே உருவாக்கியது. ஆனால், இதனை தீர்ப்பதற்கான எந்தவித எண்ணமும் அந்தக் கட்சியிடம் இல்லை” எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, சஜித் பிரேமதாஸ அமைச்சுப் பதவியை வகிக்கும் போது, அவரின் அமைச்சு நடவடிக்கைகள் பற்றிய பிரசாரப் பணிக்காக, அரசின் பெருந்தொகைப் பணத்தை செலவிட்டதாக, அங்கு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்தார்.

Comments