முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றில் ஆஜர்

🕔 November 28, 2018

முப்படைகளின் பிரதானியும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று புதன்கிழமை, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிர​தேசங்களிலிருந்து வெள்ளை வேனில் 05 மாணவர் உள்­ளிட்ட 11 பேரைக் கடத்­திய விவகாரத்தில் பிர­தான சந்­தேக நபரான நேவி சம்­பத்­ என்பவருக்கு அடைக்­கலம் கொடுத்தமை தொடர்பில், இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேற்படி குற்றச்சாட்டுத் தொடர்பில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து, நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு முப்படைகளின் பிரதானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவர் அங்கு வருகை தராத நிலையிலேயே, இன்று சரணடையும் நோக்குடன் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார் எனத் தெரிய வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்