எனது பாடல்களைப் பாடுகின்றவர்கள், எனக்குப் பணம் தர வேண்டும்: இளையராஜா மீண்டும் அறிவிப்பு
தன்னுடைய பாடல்களைப் பாடுகின்றவர்கள், தன்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று, இசையமைப்பாளர் இளையராஜா மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
முன்னரும் இது போன்ற ஒரு அறிவிப்பினை அவர் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பணம் வாங்கிக் கொண்டு இசைக் கச்சேரிகளில் தனது பாடலைப் பாடுகின்றவர்கள், தனக்கு குறிப்பிட்டதொரு பணத்தொகையை (ரோயல்டி) வழங்க வேண்டும் என்றும், இளையராஜா வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, இலவசமாக இசைக் கச்சேரி நடத்துகின்றவர்கள் அல்லது பணம் வாங்காமல் தனது பாடலைப் பாடும் பாடகர்கள் தனக்கு, எந்தவிதமான பணமும் வழங்கத் தேவையில்லை எனவும் இளையராஜா கூறியுள்ளார்.
அவ்வாறு நடந்து கொள்ளாதவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களின் நலன் கருதி, இவ்வாறானதொரு நடைமுறையை தான் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
“எனது பாடலைப் பாடுவதற்கு என்னிடம் – முன் அனுமதி பெறவேண்டும் என்று, நான் கூறுவதன் மூலம், மற்றவர்கள் பாடுவதற்கு நான் இடைஞ்சலாக இருப்பதாக யாரும் நினைக்க வேண்டாம்” என்றும் இளையராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
வீடியோ பதிவு ஒன்றின் ஊடாக இந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
வீடியோ