நாடாளுமன்றம், இன்று நள்ளிரவு கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி

🕔 November 9, 2018

– மப்றூக் –

நாடாளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கலைக்கப்படும் எனத் தெரிவயவருகிறது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாகவும், அரச அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு, அது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

கடந்த 26ஆம் திகதி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரி, பிரதம மந்திரியாக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார்.

இதனையடுத்து, நாடாளுமன்றில் 113 பெரும்பான்மையினை பெற வேண்டிய நிலைக்கு, மஹிந்த அரசாங்கம் தள்ளப்பட்டது.

இந்தப் பெரும்பான்மையை பெறும் பொருட்டு, ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கமாக ஈர்க்கும் நடவடிக்கைகளில் மஹிந்த தரப்பு ஈடுபட்டு வந்தது.

ஆயினும், அதனை எட்ட முடியாமல் போன நிலையிலேயே, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளதாக அரசியல் நோக்குநர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, அரச ஊடகமான ரூபவாஹியும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்