த.தே.கூட்டமைப்புக்குள் உடைவு: பிரதியமைச்சரானார் வியாழேந்திரன்

🕔 November 2, 2018

– மப்றூக் –

மிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை சேர்ந்த (புளொட்) வியாழேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முன்னதாக இவர் ஆசிரியராகக் கடமையாற்றினார்.

16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், உட்கட்சி முரண்பாடுகளுடன் இருந்து வரும் நிலையிலேயே, வியாழேந்திரன் பிரதியமைச்சுப் பதவியேற்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதம மந்திரியாக நியமித்தமை சட்டவிரோதமான செயற்பாடு என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறிவரும் நிலையிலேயே, அந்தக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில், அமைச்சர் பதவி ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. நாவின்னவும் கலாசார, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்