ஐ.தே.கட்சியின் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை

🕔 October 30, 2018

க்கிய தேசியக் கட்சி, இன்று செவ்வாய்கிழமை கொழும்பு கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம்  தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு ​மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இந்த தடையுத்தரவை வழங்கியுள்ளார்.

ஐ.தே.கவின் ​பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்டவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால தடையுத்தரவின் பிரகாரம் அரச பகுதிகளுக்கு நுழைய முடியாது.

மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில், ​ஆர்ப்பாட்டத்தை நடத்துவது மற்றும்  அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளல் ஆகியன இந்த உத்தரவின் கீழ் தடைச்செய்யப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்டப் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமையவே, கொழும்பு மேலதிக நீதவான் இந்த தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்