மஹிந்தவை பிரதமராக நியமித்தமை கவலைக்குரியது: மு.கா. தலைவர் ஹக்கீம்

🕔 October 26, 2018

– புதிது செய்தியாளர் அஹமட் –

ஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமையானது, எவ்வளவு அரசியல் நாகரீகமானது என்கிற கேள்வி எழுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக, மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் சென்றுள்ள ஹக்கீம், அங்கு வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே இதனைக் கூறியுள்ளார்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி விட்டு, மஹிந்த ராஜபக்ஷவை அந்த இடத்துக்கு நியமித்தமை, மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் ஹக்கீம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி மைத்திரியை வெற்றி பெற வைப்பதில், ரணில் விக்ரமசிங்கவின் பங்கு அளப்பெரியது என்றும் இதன்போது ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையில், உடனடியாக – தான் நாடு திரும்பவுள்ளதாகத் கூறிய மு.கா. தலைவர் ஹக்கீம், தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாகச் சந்தித்து இது விடயமாக ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்