தம்பானை குடிநீர் வழங்கும் திட்டம்; அமைச்சர்கள் ஹக்கீம், பைசர் முஸ்தபா ஆரம்பித்து வைப்பு

🕔 October 21, 2018
னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பொலன்னறுவை, தம்பாளை குடிநீர் வழங்கல் திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை அல்ஹிலால் புரத்தில் ஆரம்பித்து வைத்தனர்.

270 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் தம்பாளை, வெவேதென்ன, ரிபாய்புரம், அல்ஹிலால் புரம், சேவாகம, லங்காபுர ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 2500 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் பின்னர் தம்பாளை, சின்னவில்லு கிராமத்தில் வன பரிபாலனத் திணைக்களத்தினால் விவசாயம் செய்யமுடியாதவாறு தடைசெய்யப்பட்டுள்ள காணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

1815ஆம் ஆண்டுமுதல் சிங்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் நெற்செய்கையில் ஈடுபட்டுவந்த விவசாயக் காணிகளில் விவசாயம் செய்யமுடியாதவாறு வன பரிபாலனத் திணைக்களம் தற்போது தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அரசாங்கம் தங்களது நெற்செய்கைக்கு உரமானியங்கள் வழங்கியதாக அங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தங்களிடம் காணி உறுதிப்பத்திரம் இருக்கத்தக்க நிலையில், வனபரிபாலனத் திணைக்களம் விவசாயம் செய்வதை தடைசெய்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இக்காணிகளின் உரிமைப் பத்திரங்களை பிரதேச செயலாளர் ஊடாக ஒன்றுதிரட்டி, வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகாவுடன் பாராளுமன்றத்தில் சந்திப்பொன்றை நடாத்தி, அதன்மூலம் தீர்ப்பை பெற்றுத் தருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்