ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு என்னைத்தான் ரணில் கேட்டார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

🕔 October 17, 2018

டந்த னாதிபதித் தேர்தலில் தன்னையே பொது வேட்பாளராகக் களமிறங்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்போது கேட்டுக் கொண்டதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க என்னை அழைத்து பொதுவேட்பாளராக களமிறங்குமாறு கேட்டுகொண்டார்.

அப்போது, சற்று பொறுங்கள். 24 மணித்தியாலங்களுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து முக்கியமான நபரை நான்அழைத்து வருகின்றேன் என ரணிலிடம் கூறினேன்.

இதன் அடிப்படையிலேயே நானும் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவும் அன்று கட்சியில் இருந்து வெளியேறினோம்” என்று அவர் விவரித்தார்.

Comments