துமிந்த சில்வாவின் மரண தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

🕔 October 11, 2018

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது.

தனக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்துச் செய்து, தன்னை குற்றமற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி, துமிந்த சில்வா, உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷமன் பிரேமசந்திர உள்ளிட்ட 04 பேரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில், துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு  மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து குற்றமற்றவர்கள் என அறிவிக்குமாறு துமிந்த சில்வா உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தனர்.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர்களான புவனெக்க அலுவிஹார, நலீன் பெரேரா, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலலேகொட ஆகியோர் மேற்படி மேன்முறையீட்டை விசாரணை செய்து, இன்றைய தினம் அது தொடர்பான தீர்ப்பினை வழங்கினர்.

இதன்போது, துமிந்த சில்வாவின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டதோடு, அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையினையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்