ஞானசார தேரரின் நிலைக்கு, சந்திரிக்காவின் சதியே காரணமாகும்: பொதுபலசேனா குற்றச்சாட்டு

🕔 October 9, 2018

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமையின் பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சதித்திட்டங்கள் உள்ளதாக, பொதுபலசேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்குரிய தகுந்த ஆதாரங்களும் தம்மிடம் உள்ளதாக, பொதுபலசேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஸ்ஸரமுல்லே பஞ்சானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் பிணை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொதுபலசேனா அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக, ஞானசார தேரருக்கு 06 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments