மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வை குறைகிறது

🕔 September 19, 2018

பெண்கள் மாதவிடாயின் போது பயன்படுத்தும் ‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான தீர்வையில், 40 வீதத்தினை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்குமிடையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் இதற்கான இணக்கம் காணப்பட்டது.

இந்த நிலையில், தீர்வை நீக்கம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

‘சனிட்டரி நஃப்கின்’கள் மீதான வரியை குறைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென, ‘அபே ஸ்ரீலங்கா’ எனும் தேசிய இயக்கம், நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்