திருகோணமலையில் நில அதிர்வு

🕔 September 15, 2018

திருகோணமலை மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் சிறியளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், 3.5க்கும் 3.8க்கும் இடையிலான றிக்டர் அளவு நில அதிர்வே உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் சந்திரவிமல் சிறிவர்தன கூறினார்.

இருந்த போதிலும், மேற்படி நில அதிர்வு காரணமாக எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Comments