கிழக்கில் நாளை வெப்பம் அதிகரிக்கும்

🕔 September 14, 2018

கிழக்கு மாகாணத்தில்  நாளை சனிக்கிழமை கடும் வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் அதிகரித்த வெப்பம் நிலவும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளிலும் இவ்வாறு அதிக வெப்பமான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது

Comments