அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக, லியாகத் அலி கடமையேற்றார்

🕔 August 10, 2018

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் புதிய செலயாளராக ஜே. லியாகத் அலி இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பதில் செயலாளராக ரி.ஜே. அதிசயராஜ் கடமையாற்றி வந்த நிலையிலேயே, புதிய செயலாளராக லியாகத் அலி பதவியேற்றுக் கொண்டார்.

கல்முனை மாநகரசபை ஆணையாளராக கடந்த 06 வருடங்களாக பதவி வகித்து வந்த லியாகத் அலி, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மருதமுனையைச் சொந்த இடமாகக் கொண்டவராவார்.

Comments