தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தராக, பேராசிரியர் நாஜிம் மீண்டும் நியமனம்

🕔 August 10, 2018

– முன்ஸிப் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம், இன்று வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த முறையும் இவர் உபவேந்தராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அண்மையில் இடம்பெற்ற போது, 13 எனும் அதிகூடிய வாக்குகளை பேராசிரியர் நாஜிம் பெற்றிருந்தார்.

புதிய உபவேந்தர் பதவிக்காக 19 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 09 பேர் மட்டுமே மேற்படி நேர்முகத் தேர்வில் பங்கேற்றிருந்தனர்.

களனி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றிய நிலையில், கடந்த முறை இவர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமனம் பெற்றார்.

பல்கலைக்கழக உபவேந்தரின் பதவிக்காலம் 03 வருடங்கள் என்பதும், இரண்டு தடவை மட்டுமே உபவேந்தராக ஒருவர் பதவி வகிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: தெ.கி.பல்கலைக்கழக புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு: பேராசிரியர் நாஜிம் முன்னிலை

Comments