பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

🕔 August 9, 2018

– க. கிஷாந்தன் –

துளை பிரதேச சபையின் உறுப்பினர் முரளிதரன் என்பவரை பதுளை பகுதி முச்சக்கரவண்டி சாரதிகள்  தாக்கியமையைக் கண்டித்து, பதுளை பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

பதுளை பிரதேச சபை வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊவா மாகாண சபை உறுப்பினர் வேலாயுதம் ருத்திரதீபனும் கலந்து கொண்டார்.

கடந்த இரண்டாம் திகதி பதுளை பிரதேச சபை வளாகத்தில் வைத்து, பதுளை பிரதேச சபையின் உறுப்பினர்முரளிதரன் என்பவரை, அப்பகுதி முச்சக்கரவண்டி சாரதிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தினை அடுத்து, தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் பிரதேச சபை உறுப்பினர், பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே, பிரதேச சபை உறுப்பினர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற கூடாது எனவும் கூறியே, இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது, பிரதேச சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Comments