இருதய நோயால் நாளொன்றுக்கு இலங்கையில் 150 பேர் வரை மரணம்

🕔 August 4, 2018

தய நோய் காரணமாக நாளொன்றுக்கு 120 இற்கும் 150 இற்கும் இடையிலானோர் இலங்கையில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவுக்குப் பொறுப்பான விசேட வைத்திய நிபுணர் நாமல் கமகே இந்த தகவலைக் கூறினார்.

இருதய நோய் சம்பந்தமாக மூன்றாம் நிலை சிகிச்சை செய்யும் போது, அதிக செலவு ஏற்படுவதே இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்காக தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் விஷேட வைத்திய நிபுணர் நாமல் கமகே வேண்டுகோள் விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்