தலைப்புச் செய்திகள்

மரண தண்டனைக் கைதிகளின் பட்டியல்; பெண்ணின் பெயர்தான் முதலிடத்தில் உள்ளது: நீதியமைச்சர் தகவல்

போதைப் பொருள் தொடர்பான குற்றத்துடன் தொடர்பு பட்டு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலில் முதலாவதாக பெண்ணொருவரின் பெயரே உள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி – கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“போதைப்பொருள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் முதலாவதாக பெண்ணொருவர்தான் இடம் பிடித்துள்ளார்.

மேலும், அதிகமாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்களும் பெண்களாகவே இருப்பது கவலையளிக்கும் விடயமாகும்.

சிறைத் தண்டனை பெற்று அங்கு போய் வாழ்வதே மிகவும் மோசமான விடயமாகும்.

இந்த நிலையில்தான் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில் மரண தண்டனை பட்டியலை எடுத்து பார்த்தால் முதலில் பெண்ணொருவரின் பெயரே உள்ளது” என அவர் கூறியுள்ளார்.