கட்டணம் செலுத்த இயலாமையினால், நாடாளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பு ரத்து

🕔 June 23, 2018

நாடாளுமன்ற சபை அமர்வின் நேரடி ஒளிபரப்பு கடந்த சில வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நாடாளுமன்ற அமர்வினை தேசிய ரூபவாஹினி அலைவரிசை, தினமும் 02 மணித்தியாலங்கள் நேரடியாக ஒளிபரப்பி வந்தது.

எவ்வாறாயினும் இதற்காக மாதமொன்றுக்கு, 6.5 மில்லியன் ரூபாவினை ரூபவாஹினி அலைவரிசைக்கு, நாடாளுமன்றத்தினால் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளமையினால், நேரடி ஒளிபரப்பு நின்று போயுள்ளது.

மேற்படி நேரடி ஒளிபரப்புக்காக வருடமொன்றுக்கு சுமார் 08 கோடி ரூபாவினை நாடாளுமன்றம் செலுத்த வேண்டும் என்பதால், அதனை நிறுத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், ரூபவாஹினியில் மேற்படி நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ள போதிலும்,  PEO ரி.வி. ஊடாக, நாடாளுமன்ற அமர்வுகளின் நேரடி ஒளிபரப்பினைக் காண முடியும் என, நாடாளுமன்றத் தரப்புகள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்