அக்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்

🕔 June 18, 2018

– முகம்மட் –

க்கரைப்பற்று 40ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது, தமிழர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, முஸ்லிம்களின் மோட்டார் சைக்கிள்களையும் நாசப்படுத்தியுள்ளனர்.

குறித்த பகுதியில் முஸ்லிமொருவர் தனக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்றபோது, அங்கு வந்த சில தமிழர்கள்  காணிச் சொந்தக்காரர் மீதும் அவருடன் சென்றவர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதேவேளை, முஸ்லிம்களுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள்களையும் நாசப்படுத்தியுள்ளனர்.

தமிழர்களிடமிருந்து முஸ்லிம்கள் காணி வாங்கக் கூடாது என்றும் மீறி வாங்கினால் கொலையும் கெய்வோம் எனவும் தாக்குதல் நடத்தியோர் அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே ஒரு தடவையும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதுதொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலே, இன்றைய இத்தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஆலையடிவேம்பைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் உள்ளனர் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளானவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு அருகில் ராணுவ முகாம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வீடியோ

Comments