ஒலுவில் மகாபொல தொழிற் பயிற்சி நிலையக் கட்டிடங்கள், கடலரிப்பினால் சேதம்

🕔 September 2, 2015

Sea erosion - 06
– முன்ஸிப் –

லுவில் துறைமுகத்தினை அண்டிய பகுதிகளில், கடலரிப்பின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள மகாபொல தொழில் பயிற்சி நிலைய கட்டிடங்கள் கடலரிப்பினால் பாதிப்படைந்து வருகின்றன.

ஒலுவில் பிரதேசத்தில் துறைமுக நிர்மாண நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அந்தப் பகுதியினை அண்மித்த நிலப்பரப்புகள் கடலரிப்பினால் மிகக் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

மேலும், கடலரிப்பின் காரணமாக, ஒலுவில் கடற்கரையினை அண்டியிருந்த நூற்றுக் கணக்கான தென்னங் தோட்டங்கள் அழிவடைந்துள்ளதோடு, கரையிலிருந்து நூறு மீற்றருக்கும் அதிகமான நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, கடலரிப்பினைத் தடுக்கும் நோக்குடன் கடலுக்குள் பாரியளவு பாறாங்கற்கல் கொட்டப்பட்டு, அலைகளின் வேகத்தினைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், கடலரிப்பின் தீவிரம் குறைவடையவில்லை.

இதேவேளை, ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் கடலரிப்பினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, இப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அரசில்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் பல்வேறு தடவை கோரிக்கை விடுத்துள்ள போதிலும், அவை தொடர்பில் திருப்திகரமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது கடலரிப்பின் தீவிரம் அதிகரித்துள்ளதால், துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான ஒலுவில் மகாபொல தொழில் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான கட்டிடங்கள் தற்போது பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

மேலும், கடற்கரையில் அமைந்துள்ள அல் – மினாரா வித்தியாலயக் கட்டிடங்களை அண்டிய நிலப்பகுதிகளும் கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன.

எனவே, ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்தக் கடலரிப்பினை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை, இனியாவது – மேற்கொள்வதற்கு, உரிய தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.Sea erosion - 05Sea erosion - 09Sea erosion - 08Sea erosion - 02Sea erosion - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்