ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இஸ்மாயில், நாடாளுமன்ற உறுப்பினரானமை குறித்து, அமைச்சர் விஜேதாச விசனம்

🕔 June 9, 2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயிலுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்தமை ஆச்சரியமளிப்பதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்  நவவி ராஜினாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் இன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து உயர் கல்வி அமைச்சர் இன்று சபையில் உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

முன்னாள் உபவேந்தருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில்தான், இவர் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

இதேவேளை, இதுதான் நாம் இன்று நாட்டில் முகம்கொடுக்கும் யதார்த்தம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

உயர் கல்வி அமைச்சரின் குரல் பதிவு

Comments