கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு தலைவராக, கலாநிதி கபூர் நியமனம்

🕔 June 6, 2018

முன்னாள் நீதிவானும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல். அப்துல் கபூர், கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன், இவருக்கான நியமனக் கடிதத்தினை நேற்று செவ்வாய்கிழமை, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக் காரியாலயத்தில் வைத்து வழங்கினார்.

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும், பாலமுனையை வாழ்விடமாகவும் கொண்ட கலாநிதி கபூர், கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் விரிவுரையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் எஸ்.எம். இக்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments