முஸ்லிம்களின் எதிரியாக என்னை கூறினீர்களே, இப்போது என்ன நடக்கிறது: ஹக்கீடம் கேட்ட மஹிந்த

🕔 June 1, 2018

– ஏ.எச்.எம். பூமுதீன் –

ஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும் (இப்தார்) நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அவருடைய கொழும்பு வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

500 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்த போதிலும் சுமார் 750 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்,எம்.பௌஸி, ஹிஸ்புள்ளாஹ் , முன்னாள் அமைச்சர் அதாவுள்ளா உட்பட இன்னும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் பங்கு கொண்டிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த – அவரது துனைவியார் மற்றும் அவரது புதல்வர் நாமல் எம்பி ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இப்தார் நிகழ்வின் ‘ஹைலைட்’ முகா தலைவரின் வருகையாகும்.

இப்தார் நிறைவடைந்ததன் பின்னர் – மஹிந்த , அவரது வரவேற்பறைக்குச் செல்லவே, அவரை சந்தித்து உரையாட நீண்ட வரிசையில் அங்கு கலந்துகொண்டோர் காத்து நின்றனர். அவர்களுள் ரவூப் ஹக்கீமும் ஒருவராவார்.

பின்னர் ஹக்கீமை கண்ட மஹிந்த; “ஆ…. ஹக்கீம் எமத்திதுமா, கோமத ?” என சுகம் விசாரித்து, அவரது கையை பற்றிய மஹிந்த ராஜபக்ஷ; “முஸ்லிம்களின் எதிரியாக என்னை விளம்பரப்படுத்தினீர்கள்.இப்போது இந்த ஆட்சியில் என்ன நடக்கிறது” எனக் கேட்ட போது, ஹக்கீம் எதுவுமே கூறாமல் புன்முறுவல் பூத்தார்.

இப்தாருக்கு ஹக்கீம் வருகை தந்ததை அவதானித்த சிலர்; “வேறு வழியின்றி மைத்திரிக்கு ஆதரவளிக்கப் போகின்றேன். மைத்திரிக்கு அமைச்சர் ரிஷாத் ஆதரவளித்து விட்டார். அதனால் நானும் போகின்றேன்” என்று மஹிந்தவுக்கு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுத்தானே போனார். அதனால் இவரது வருகை ஆச்சரியப்படுவதற்குரிய விடயமல்ல” என்று கூறியதையும் அவதானிக்க முடிந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்