சரத்பொன்சேகாவின் அமைச்சு அலுவலகம்; 702 மில்லியன் ரூபாய் வாடகை

🕔 June 2, 2018

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கீழுள்ள பிராந்திய அபிவிருத்தி மற்றும் வனவிலங்குத் துறை  அமைச்சுக்கான அலுவலகத்துக்காக, தனியார் கட்டடமொன்றினை 702 மில்லியன் ரூபாவுக்குக் குத்தகை அடிப்படையில் பெற்றுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாதமொன்றுக்கு 11.7 மில்லியன் (01 கோடியே 17 லட்சம்) ரூபாய் எனும் அடிப்படையில் 05 வருடங்களுக்கு மேற்படி கட்டடம் குத்தகைக்குப் பெறப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனமொன்றிடமிருந்து மேற்படி கட்டடம் 2016ஆம் ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றின் மூலம் பெறப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தமானது 31 மே 2021ஆம் ஆண்டு நிறைவடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சரத்பொன்சேகா – பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது மேற்படி கட்டடம் பெறப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அவருக்கு வனவிலங்குத் துறை அமைச்சும் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, செத்செரிபாயவில் கடமையாற்றி வந்த வனவிலங்குத் துறை அமைச்சின் பணியாளர்கள், தற்போது ராஜகிரியவில் உள்ள மேற்படி கட்டத்துக்கு மாறியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்