முகம் மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளுக்கு, டென்மார்கில் தடை

🕔 May 31, 2018

முகத்தை மறைக்கும் பர்தா போன்ற ஆடைகளை பொது இடங்களில் அணிவதற்கு டென்மார் அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

முகத்தை மறைப்பதற்கான தடை குறித்த சட்ட வரைபை இன்று வியாழக்கிழமை அந்நாட்டு  அரசு, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

இதன்போது 75 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த தடைச் சட்டத்துக்கு ஆதரவாகவும், 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

இந்த சட்டவரைபு வெற்றியடைந்ததை அடுத்து, பொதுஇடங்களில் எவரேனும் முகத்தை திரையிட்டு மறைத்திருந்தாலோ, அல்லது முகத்தை மறைக்கும் விதமாக பர்தா அணிந்து இருந்தாலோ அவர்களுக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்