தலைப்புச் செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இப்தார் நிகழ்வு; ஐ.எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்றது

– எம்.வை. அமீர் –

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் இப்தார் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.

இப்தார் நிகழ்வினை சாய்ந்தமருது பிரதேச செயலகம் வருடாந்தம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச செயலக நலன்புரி ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர் அஷ்செய்க் ஏ.எச். அஹமட் அம்ஜத் (நளிமி) மார்க்க சொற்பொழிவாற்றினார்.

இந் நிகழ்வில் சட்டம் ஒழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம். ஹனிபா, இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் மற்றும் சாய்ந்தமருது பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.அஜ்வத் உட்பட உயர் அதிகாரிகளும் சாய்ந்தமருது பிரதேச செயலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.