முஸ்லிம்களுக்கெதிராக இனவாதம் கக்கும் மறவன்புலவு சச்சிதானந்தன் யார்? பின்னணி என்ன?

🕔 May 27, 2018

– புதிது செய்தியாளர் முன்ஸிப் அஹமட் –

“மாடுகளைக் கொல்வதாக இருந்தால், முஸ்லிம்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று தெரிவித்துள்ள சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் என்பவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராவார்.

இவர், இலங்கைக் கடற்றொழில் திணைக்களத்திலும் பின்னர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – மறவன்புலவு எனும் இடத்தில் பிறந்த இவருக்கு இப்போது 77 வயதாகிறது.

இவர் ‘சிங்கள கடற்படையின் அட்டூழியம்’ என்பது உள்ளிட்ட சில புத்தகங்களை எழுதியுள்ளார்.

புலிகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்டு வந்த ‘தமிழ் நெற்’ எனும் ஆங்கில இணையத்தளத்துக்கு 2009ஆம் ஆண்டு இவர் எழுதிய கட்டுரையொன்றில்; ‘சிங்களப் பேரினவாதம் என்பது ஒரு விஷப்பாம்பாகும். அதனை போஷித்து வளர்க்குமாறு தமிழர்கள் வேண்டப்படுகின்றார்கள். இது – நெருப்பில் எரிபொருளை ஊற்றுவதற்கு ஒப்பானதாகும்’ என குறிப்பிட்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

கடந்த காலங்களில் சிங்களவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் எதிராக எழுதியும் பேசியும் வந்த இவர், தற்போது இலங்கை – பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் மட்டும் சொந்தமான நாடாகும் எனத் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் மரபுகளுக்கு முரணாக முஸ்லிம்கள் நடப்பார்களாயின் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் பற்றிய மேலதிக புரிதலுக்காக 2016ஆம் ஆண்டு, பிபிசி க்காக மறவன்புலவு சச்சிதானந்தன் வழங்கிய பேட்டியொன்றினையும் இங்கு இணைத்துள்ளோம்.

குறிப்பு: சிவசேனை இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந்த பேட்டி வழங்கப்பட்டது.

தொடர்பான செய்தி: மாடுகளைக் கொல்வதாக இருந்தால், நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: சிவசேனை தலைவர் சச்சிதானந்தன்

பிபிசி க்கு வழங்கிய பேட்டி – ஒலி வடிவில்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்