மாடுகளைக் கொல்வதாக இருந்தால், நாட்டை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்: சிவசேனை தலைவர் சச்சிதானந்தன்

🕔 May 27, 2018

ந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியில், மரபுகளை மதிக்கத் தெரியாதவர்கள் நாட்டை விட்டு  வெளியேறுங்கள் என்று, சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் குறித்து இவ்வாறு கூறியுள்ள சச்சிதானந்தன்; “சஊதி அரேபியாவில் பன்றி இறைச்சியை இந்துக்கள் உண்ண முடியுமா” எனவும் கேள்ளியெழுப்பியுள்ளார்.

மாடுகளைக் கொல்வதற்கு எதிராகவும், சாவகச்சேரியிலுள்ள மாடுகள் கொல்களத்தினை மூடிவிடும்படியும் வலியுறுத்தி நேற்று சனிக்கிழமை சாவகச்சேரியில் நடத்தப்பட்ட அடையாள உண்ணாவிரத நடவடிக்கையின் போது, ஊடகங்களுக்கு இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இங்கு 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் மாட்டிறைச்சிக் கடைகள் இருக்கவில்லை. இந்த மண்ணிலே பிறந்தவர்கள் இதை வைத்திருக்கவில்லை. நேற்று முந்தாநாள் வந்தவர்களே வைத்திருக்கின்றனர்.

சஊதி அரேபியாவுக்கு ஒரு வெள்ளையர் போனால், அங்கு பன்றி இறைச்சி சாப்பிட முடியுமா? சஊதி அரேயியாவிலும், ஐக்கிய அரபு ராச்சியத்திலும், குவைத்திலும் இந்துக்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது. ஆனால், அங்கு இந்துக்கள் பன்றி இறைச்சி சாப்பிட முடியுமா? அப்படியென்றால், இங்கே வருகின்றவர்களுக்கு நாம் எப்படி மாட்டிறைச்சி கொடுக்க முடியும்?

இந்த பூமியிலே மாட்டிறைச்சிக் கடைகள் இருக்கவே முடியாது. இது இந்து பூமி அல்லது பௌத்த பூமியாகும். வேறு எந்த மக்களுக்கும் இந்த பூமி சொந்தமானதல்ல. இதை நாங்கள் தெளிவாகச் சொல்கிறோம். இங்கே வந்தால் இந்த மரபுகளை ஏற்றுக் கொள்ளுங்கள், இந்த மரபுகளுக்கு அமைய வாழுங்கள். அல்லது வெளியேறுங்கள்.

எங்கள் நாட்டுக்கு வெளியிலிருந்து வந்தவர்களுக்குச் சொல்கின்றோம். 05, 06 ஆயிரம் ஆண்டுகால எங்களுடைய மரபினை நீங்கள் ஏற்றுக் கொண்டு நடக்கவில்லை என்றால், நீங்கள் வெளியேறி – உங்களுக்கு விருப்பமான நாட்டில் இருந்து கொள்ளலாம்.

நேற்றைய தினம் கூட, திருகோணமலை தென்கைலாய சுவாமி ஆதினம்; தன்னுடைய 06 மாடுகளைக் காணவில்லை என்றும், ரமழான் நோன்புக்காக களவாடிக் கொண்டு சென்று விட்டார்கள் என்றும்  சொல்கிறார்.

மாடுகள் கொல்லப்படுவதை நாங்கள் ஒத்துக் கொள்ளவே மாட்டோம். நீங்கள் விரும்பினால், உங்கள் மரபுகள் உள்ள நாடுகளுக்குப் போய் செய்யுங்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்