வட – தென் கொரிய தலைவர்கள், திடீர் சந்திப்பு

🕔 May 26, 2018

ட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளின் தலைவர்கள் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென இன்று சனிக்கிழமை சந்தித்துள்ளனர்.

இந்த வகையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளனர்.

இதேவேளை வட கொரியா – அமெரிக்கா நாடுகளின் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்ட நிலையில், அதனை மீண்டும் நடத்த முயற்சி எடுக்கப்படுகிறதாகவும் தெரியவருகிறது.

ஜூன் 12ஆம் திகதி நடைபெறவிருந்த மேற்படி உச்சிமாநாட்டை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மீண்டும் அது நடக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்