தேர்தல் பணிக் கொடுப்பனவு இன்னுமில்லை: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் இழுத்தடிப்பு

🕔 April 27, 2018

– அஹமட் –

ள்ளுராட்சித் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களில் பெரும்பாலானோருக்கு, இதுவரை தேர்தல் பணிக் கொடுப்பனவினை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் வழங்கவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகிறது.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கடந்த உள்ளுராட்சித் தேர்தல் கடமைகளுக்குச் சென்றிருந்தனர். ஆயினும், அவர்களில் பெரும்பாலானோருக்கு இதுவரையில் அதற்கான கொடுப்பனவினை வழங்காமல், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் இழுத்தடித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

எவ்வாறாயினும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் கடமை புரிகின்றவர்களுக்கு தேர்தல் பணிக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு விட்டதாகவும், மேலும், வலயக் கல்வி அலுவலக கணக்காளரின் விருப்பத்துக்கிணங்க சில ஆசிரியர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ‘புதிது’ செய்தித் தளத்துக்குக் கூறினர்.

எனவே, உள்ளுராட்சி தேர்தல் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான பணிக் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க வேண்டுமென்று, கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments