இலங்கையில் பிறப்பை விடவும், கருக்கலைப்பு அதிகம்: திடுக்கிடும் தகவல்

🕔 April 24, 2018

லங்கையில் வருடமொன்றுக்கு 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று டொக்டர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அதேவேளை, 35 ஆயிரத்து 500 குழந்தைகள் வருடமொன்றுக்கு இலங்கையில் பிறப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை கத்தோலிக்கச் சபையின் ஏற்பாட்டில், பொரளையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் சட்ட விரோத கருக்லைப்புகள் இடம்பெறுகின்றன. சட்ட விரோத கருக்கலைப்புகள் அங்கீகரிக்கப்படாத இடங்களில், தகுதியற்ற நபர்களாலும் இவை மேற்கொள்ளப்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆயிரம் சட்டவிரோத கருக்கலைப்பு மருத்துவர்கள் செயற்படுகின்றனர். அரச மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் இவ்வாறான கருக்கலைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு கருக்கலைப்புக்குப் பயன்படுத்தும் உபகரணங்களால் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான சந்தர்பங்களும் காணப்படுகின்றன” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்