திருகோணமலை மீனவர்களை கடலுக்குச் செல்ல அனுமதிக்குமாறு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உத்தரவு; இம்ரான் மகரூப் சந்தித்தமையினால் பலன்

🕔 April 25, 2018

திருகோணமலை மீனவர்களை  கடலுக்கு செல்ல அனுமதிக்குமாறு,  பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன, திருகோணமலையிலுள்ள கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார் என, நாடாளுமன்ற உறுப்பினர் இன்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மற்றும் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன ஆகியோருக்கு இடையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்பே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக திருகோணமலை மாவட்டத்தில் கடலுக்கு செல்லும் மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்தமையினால், தமது அன்றாட தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் மீனவர்கள் பாரிய சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஏனைய மாவட்ட மீனவர்கள் சுதந்திரமாக தமது தொழிலை முன்னெடுக்கின்போதும் திருகோணமலை மாவட்ட மீனவர்கள் குறிப்பாக கிண்ணியா மூதூர் கருமலையூற்று மீனவர்கள் கடற்படையினரால் அடிக்கடி கைதுசெய்யப்படுகின்றமை பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபிடம் முறையிடப்பட்டது.

இந்த பிரட்சினை தொடர்பாக இன்று பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவை சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கலைந்துரையாடினார். இதனையடுத்து மீனவர்களை சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறு திருகோணமலை மாவட்ட கடற்படையினருக்கு அமைசர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என, இன்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பிரட்சினைக்கு நிரந்தர தீர்வு ஒன்றை காணும் பொருட்டு, விரைவில் மீனவர் சங்க பிரதிநிதிகளை சந்திப்பதாகவும் இதன்போது அமைச்சர் உறுதியளித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்