பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள், கடமைக்கு திரும்பினர்

🕔 April 17, 2018

ல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை, மீண்டும் கடமைக்கு திரும்பியுள்ளனர் என்று பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கடந்த 44 நாட்களாக தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த காலப்பகுதியில் 15 பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட சகல உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

ஆயினும், கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்தமையினை அடுத்து, வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் தமது சம்மேளனத்தின் அனைத்து ஊழியர்களும் இன்று மீண்டும் சேவைக்கு திரும்பியுள்ளதாக, பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

 

Comments