ஐ.தே.க. செயலாளர் பதவியை பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீனிடம் வேண்டுகோள்

🕔 April 10, 2018

மைச்சர் பதவியைத் துறந்து விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்குமாறு, அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம், அந்தக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் பீடத்துக்கு, அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நவீன் திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமையினை அடுத்து, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கூட்டம், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலறி மாளிகையில் இடம்பெற்றபோதே, அரசியல் பீடத்துக்கு அங்கத்தவர்களை இணைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்