மிகப் பெரும் பொறுப்பேற்கத் தயாராகுமாறு, சஜித் பிரேமதாஸவிடம் ரணில் தெரிவிப்பு

🕔 March 30, 2018

க்கிய தேசியக் கட்சியில் மிக முக்கியமானதொரு பொறுப்பினை வகிப்பதற்கு தயாராக இருக்குமாறு, தன்னிடம் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியதாக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போதே, சஜித் பிரேமதாஸவிடம் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை பொறுப்பேற்பீர்களா என, கட்சியின் செயற்குழுக் கூட்டத்தினையடுத்து ஊடகவியலாளர் ஒருவர் சஜித் பிரேமதாஸவிடம் கேள்வியொன்றினை முன்வைத்தபோது; ஏகமனதாக ஒப்படைக்கப்படும் எந்தவொரு பொறுப்பினையும் பெற்றுக் கொள்வதற்கு தான் தயாராக உள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

Comments