போலிக் கணக்குளை கண்டறியும் நடவடிக்கைகளை அடுத்து, சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படும்

🕔 March 11, 2018

மூக வலைத்தளங்களிலுள்ள போலியான கணக்குகளைக் கண்டறியும் நடவடிக்கைகளையடுத்து, சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் என்று, தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி கீர்த்தி மஞ்சுநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“சமூக வலைத்தள நிறுவனங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அவற்றை தொடர்ச்சியாக அவதானிக்க வேண்டும்.

இந்த இடைக்காலத் தடையுத்தரவு தற்காலிகமானதாகும்.

போலிக் கணக்குகள் ஊடாகவே பிரச்சினைகள் உருவாகியுள்ளன. போலியான கணக்குக்கு சொந்தக்காரர் யார் என எமக்கு அறிய முடியாது. ஒருவருக்கு தேவையான எண்ணிக்கையில் கணக்குகளைத் திறக்க முடியும். ஆனால், அந்த நபரைத் தேடிக்கொள்ள முடியாது.

இந்த வலைத்தளங்கள் ஊடாக சமூகத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் நபரை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கணக்குகளைத் திறப்போர் அடையாள அட்டை இலங்கங்களை அல்லது தொலைபேசி இலங்கங்களைப் பயன்படுத்துகின்ற மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியும்.

போலிக் கணக்குக்கு சொந்தக்காரர் யார் என்பதை அறியும் வகையிலான மாற்று வழிமுறையொன்றினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்