அமைச்சரவை மாற்றத்தின் போது, ரவிக்கு பதவியில்லை; ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிய பட்டியலிலும் பெயரில்லை

🕔 February 24, 2018

ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவிகள் எவையும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அலுவலகச் செய்திகள் தெரிவித்துள்ளன.

அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவதற்கு முயற்சிப்பதாகவும், அவர் அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவார் எனவும் செய்திகள் உலவி வந்த நிலையிலேயே, அவருக்கு எந்தவித அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி அலுவலகத் தரப்பு கூறியுள்ளது.

அதேவேளை, ஐ.தே.கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பின் இருக்கை உறுப்பினர்கள், ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டுமென கருத்து வெளியிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் அமைச்சுப் பதவிக்காக சிபாரிசு செய்து, ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பி வைத்துள்ள பெயர் பட்டியலும், ரவி கருணாநாயக்கவின் பெயர் இல்லை என தெரியவருகிறது.

பிணை முறி ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டார் எனும் குற்றச்சாட்டில், ரவி கருணாநாயக்க தனது அமைச்சர் பதவியினை ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்