சி.சி.ரி.வி. கமராக்கள் இருந்தால், எதிர்ப்புத் தெரிவிக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய

🕔 January 25, 2018

பால் மூல வாக்களிப்பு நடைபெறும் இடங்களில் சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் வாக்களிப்போர் தமது ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும் என்று, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வாக்களிக்கப்படும் இடங்களில் சி.சி.ரி. வி. கமராக்கள் போன்ற சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

மேலும், வேட்பாளர்கள் வீடுகளுக்கு வாக்குக் கேட்டுச் செல்லும் போதும், பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும், பட்டாசுகள் கொழுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, இன்றும் நாளையும் தபால் மூல வாக்ளிப்பின் இரண்டாம் கட்டம் நடைபெறுகிறது.

தபால் மூல வாக்களிப்பின் முலாம் கட்டம் கடந்த 22ஆம் திகதி நடைபெற்றமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்