கண்ணை மறைத்த காமம்; மு.கா. தலைவரின் சமூக துரோகம் குறித்து, குமாரி கூரே வாக்கு மூலம்

🕔 January 19, 2018

– புதிது ஆசிரியர் பீடம் –

ந்தரங்கங்கள் எல்லோருக்கும் உள்ளன. சிலரின் அந்தங்கங்கள் முகம் சுழிக்க வைப்பவை, சிலரின் அந்தரங்கங்கள் அருவருப்பானவை. இவற்றுக்கு அப்பாலான அந்தரங்கங்களும் இருக்கின்றன.

எவ்வாறாயினும் அடுத்த மனிதனின் அவ்வாறான அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி, அவனை அவமானப்படுத்துவதை நல்ல மனிதர்கள் விரும்புவதில்லை.

ஆனால், சிலரின் அந்தரங்கங்களை அவ்வாறு மறைத்து விட முடியாது. ஒருவரின் அந்தரங்கமான செயற்பாடு, ஒரு சமூகத்துக்கே ஆபத்தாக அமைந்து விடும் போது, அதனை அம்பலப்படுத்துவதே சிறப்பானதாகும். அவ்வாறு செய்வது சமூகப் பணியுமாகும்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர் எனும் பொறுப்பையும், அதனால் கிடைத்த அடையாளத்தையும் வைத்துக் கொண்டு, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ஆடிய ஆட்டங்கள், செய்த மோசடிகள் மற்றும் துரோகங்கள் பற்றியெல்லாம் அரசியல் அரங்கில் தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வந்தாலும், அவற்றினை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்கள், மிகவும் குறைந்தளவிலேயே வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மீது மக்கள் கொண்டுள்ள கண்மூடித்தனமான அபிமானம் காரணமாக, அந்தக் கட்சியின் தலைவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நம்புவதற்கு தயங்கி வருகின்றமையினையும் காணக் முடிகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் குறித்து, அவரின் ஆசை நாயகியாக ஒரு காலத்தில் அறியப்பட்ட குமாரி கூரே வழங்கிய வாக்கு மூலத்தின் சில வீடியோ பதிவுகள் புதிது இணையத்தளத்துக்கு கிடைத்தன. எனவே, அவற்றினை வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.

குமாரி கூரே மீது கொண்டிருந்த மோகம் காரணமாக, முஸ்லிம்களின் அரசியல் இருப்பு மற்றும் பாதுகாப்பு போன்றவை பற்றி பேசப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் கூட, ஒரு தடவை மு.கா. தலைவர் கலந்து கொள்ளாமல் இருந்தார் என்று, குமாரியே வழங்கியுள்ள வாக்கு மூலத்தைப் பார்த்த போது, மனம் திடுக்கிட்டுப் போனது.

முஸ்லிம் சமூகம் மிகத் திட்டமிட்டு ஏமாற்றப்படுகிறது என்பதை தெரிந்து கொண்ட பிறகும், அது குறித்து பொறுப்புள்ள ஓர் ஊடகம் எனும் வகையில் எம்மால் பேசாமலிருக்க முடியவில்லை.

அதனால்தான், 14 வருட காலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த ஆவணத்தை இங்கு வெளியிடுகிறோம்.

வீடியோ

Comments