நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் மிக விரைவில் வருவேன்; ஹாபிஸ் நசீர் அஹமட் சவால்: பலித்தது புதிது செய்தி

🕔 January 7, 2018

– முன்ஸிப் அஹமட் –

மிக விரைவில் தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் வருவேன் என்று, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

அந்தப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான முழு ஏற்பாடுகளையும், தாம் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏறாவூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த தகவல்களைத் தெரிவித்தார்.

இதன்போது மு.காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை கடுமையாக விமர்சித்த ஹாபிஸ் நசீர் அஹமட்; ஒரு தொழிற்சாலையை உங்களால் அமைக்க முடியுமா? எத்தனை பேருக்கு நீங்கள் தொழில் வாய்ப்பு வழங்கியுள்ளீர்கள் எனவும், அலிசாஹிர் மௌலானாவை விழித்து, கேள்வியெழுப்பியிருந்தார்.

இது இவ்வாறிருக்க, கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதியன்று,’ புதிது’ செய்தித் தளத்தில், இது குறித்து ஒரு செய்தியினை நாம் வெளியிட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

‘தேசியப்பட்டியல் எம்.பி.யாகிறார் ஹாபிஸ் நசீர்; ஐ.தே.க. உச்ச தலைகள் ஹக்கீமுக்கு வற்புறுத்தல்’ எனும் தலைப்பில் செய்தியொன்றினை நாம், அன்றைய தினம் வழங்கியிருந்தோம்.

குறித்த செய்தியில், ஹாபிஸ் நசீருக்கு பிரதியமைச்சர் பதவியும் கிடைக்கும் சாத்தியம் இருக்கின்றமை பற்றியும் நாம் எழுதியிருந்தோம்.

‘புதிது’ செய்தித் தளம் வெளியிட்ட செய்தியினை, தற்போது ஹாபிஸ் நசீரே உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னைய செய்தியை பார்வையிட: தேசியப்பட்டியல் எம்.பி.யாகிறார் ஹாபிஸ் நசீர்; ஐ.தே.க. உச்ச தலைகள், ஹக்கீமுக்கு வற்புறுத்தல்

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்