விபச்சாரத்தில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் 06 பெண்களும், விபசார நிலையத்தை நடத்திய ஆண் முகாமையாளர் ஒருவரும் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மசாஜ் நிலையம் எனும் பெயரில் காலி வீதி, ரத்மலான பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த விபச்சார நிலையத்தில் இருந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 22 தொடக்கம் 46 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.
இவர்கள் கொட்டாவ, உடப்புசல்லாவ, கந்தப்பொல மற்றும் மன்னார் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
கல்சிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் இவர்கள் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.



