சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்தார் மஹிந்த; நாமலும் உடன் சென்றார்

🕔 December 25, 2017

திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், இன்று திங்கட்கிழமை வீடு திரும்பியுள்ளார் எனத் தெரியவருகிறது.

முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர், இன்று காலை வைத்தியசாலைக்குச்செ  சென்று, சம்பந்தனைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

திருகோணமலையில் வைத்து திடீரென சுகயீனமடைந்த சம்பந்தன், கொழும்பு திரும்பிய நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கிருமித் தொற்று காரணமாகவே சம்பந்தன் நோயுற்றதாக, அவரின் பிரத்தியேக செயலாளர், ஊடகமொன்றுக்குத் தெரிவித்திருந்தார்.

Comments