மஹிந்தவுக்குக் கிடைக்கும் 70 உறுப்பினர்களில், 60 பேர் மைத்திரியுடன் இணைந்து விடுவார்கள் என்கிறார் ஆஸாத் சாலி

🕔 August 13, 2015

Asad saali - 032– அஸ்ரப் ஏ. சமத் –

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் போன்ற திருடர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அருகில் கூட எடுக்க மாட்டார் என்று, மத்திய மாகாணசபை உறுப்பினரும், தே.ஐ.முன்னணியின் தலைவருமான ஆஸாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள, ஆஸாத் சாலியின் கட்சிக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, மேற்கண்டவாறு ஆஸாத் சாலி தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்;

“முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, தான் – மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர் இல்லை என்றும், ஜனாதிபதி மைத்திரியின் அணியைச் சேர்ந்தவர் என்றும் கூறுகின்றார். ஹிஸ்புல்லாஹ் போன்ற திருடர்களை, ஜனாதிபதி மைத்திரி – தன் அருகில் கூட எடுக்க மாட்டார்.

இந்த ஹிஸ்புல்லா, சிலிங்கோ இஸ்லாமிய வங்கியில், தமது மனைவியின் பெயாில் பணத்தை எடுத்துவிட்டு, சிலிங்கோ முதலாளியை சிறைக்கு அனுப்பியவராவார். இவரிடம் பணத்தை மீளச் செலுத்தச் சொன்னபோது, தனது மனைவி – தன்னிடமிருந்து விவகாரத்து பெற்றுவிட்டாா் என்றும், தனது மனைவி சிலிங்கோ வங்கியிலிருந்த பெற்ற பணத்துக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் பொய் கூறினார்.

மேலும், மேற்படி ஹிஸ்புல்லாஹ் – கொழும்பிலிருந்த தனது தொழிற்சாலையினையும், பஸ்சையும் எரித்து விட்டு, அதற்காக காப்புறுதி பெற்றுக் கொண்டார்.

இவ்வாறான ஒருவரை, ஜனாதிபதி மைத்திரிபால தனது நல்லாட்சிக்குள் ஒருபோதும் சேர்த்துக் கொள்ள மாட்டாா். எனவே, ஹிஸ்லாவின் பிரதேச மக்கள் – சற்று சிந்தித்து, நேர்மையான அரசியல்வாதிகளைச் தேர்ந்தெடுங்கள்.

இன்னொருபுறம், மகிந்தவுடன் சேர்ந்திருக்கின்ற ஏ.எச்.எம். அஸ்வா் – குர்ஆணைக் கொண்டு, மஹிந்தவுக்கு வசியத்து சொல்லுகின்றாா். அதேபோன்று குருநாகல் சத்தாா், சட்டத்தரணி சஹீட் ஆகியோர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்றும், அவ்வாறு நடத்தால், தமக்கு வெளிநாட்டுத் தூதுவர் பதவி கிடைக்கும் என்றும் கனவு காண்கின்றனா். இதனால்தான், மஹிந்தவின் பின்னால் இவர்கள் வால் ஆட்டித் திரிகின்றனர்.

ரகர் வீரர் தாஜுத்தீனின் ஜனாசாவைத்  தோண்டுவது, இஸ்லாத்தில் தவறான விடயம் என்று கூறுவதற்கு, திலான் பிரேராவுக்கு என்ன உரிமை இருக்கிறது? யார் இவருக்கு இதைச் சொல்லிக் கொடுத்தது? அஸ்வர் ஹாஜியாரா?

மகிந்த ராஜபக்ஷவை, ஒருபோதும் பிரதமராக நியமிக்க போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். இதேபோன்று, ஸ்ரீ.ல.சு கட்சியை நாசமாக்குவதற்கு, தான் அனுமதிக்கப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, கூறியுள்ளதோடு, மஹிந்த தரப்பினரைத் தோற்கடிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவுடன் இருக்கின்ற திருடர்கள், மீண்டும் இந்த தோ்தலில்வெற்றி பெறப்போவதில்லை.  ஜ.தே.கட்சி 105 ஆசனங்களைப் பெறும். மகிந்த 70 ஆசனங்களைப் பெறுவாா். அதில் 60 பேர் மைத்திரி பக்கம் வந்து, மீண்டும் ஜ.தே.கட்சி அரசில் அமைச்சர்களாகி, தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்