தனது கட்சி உறுப்பினர்கள் மூலம் வழக்குத் தொடர்ந்து, தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது: ஒன்றிணைந்த எதிரணி குற்றச்சாட்டு

🕔 November 15, 2017

ள்ளுராட்சித் தேர்தலை பிற்போடுவதற்காக அரசாங்கம் மோசமான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், தனது சொந்தக் கட்சி உறுப்பினர்கள் மூலம், தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வழக்குத்  தொடுத்துள்ளதாகவும்  ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஒன்றிணைந்த எதிரணிக்கு இது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்த எதிரணி தயாராகவே உள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளையும், சிவில் அமைப்புக்களையும், குழுக்களையும் இணைத்துக் கொண்டு, ஒரு பரந்த கூட்டணியாக ஒன்றிணைந்த எதிரணி, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்கும்.

ஐக்கிய தேசியக் கட்சி தவிர, வேறு எந்த கட்சியுடனும் ஒன்றிணைந்த எதிரணி கூட்டணி வைத்துக் கொள்ள தயாராக உள்ளது. எமது கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக விரையில் அறிவிப்போம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்