அதிகாரப் பகிர்வு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்: குமார வெல்கம நாடாளுமன்றில் தெரிவிப்பு

🕔 November 8, 2017

திகாரப் பகிர்வு என்பது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

“நாங்கள் இப்போது நன்றாக இருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இப்போது கொழும்பில் வசிக்கிறார், யாழ்ப்பாணம் சென்று வருகிறார். அவர் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். அவரை யாரும் பேசத்துடன் நடத்துவதில்லை. எங்களை விடவும், அவரை மக்கள் அனுசரித்துப் போகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் 05 லட்சம் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்றால், கொழும்பில் இரண்டரை லட்சம் பேர் இருக்கின்றனர்.

இங்குள்ளவர்களுக்கு என்ன பிரச்சினை? இவர்களுக்கு இடம்பெற முடியாதா? வீடு பெற முடியாதா? வாகனம் பெற முடியாதா?

ஆனால், வடக்கில் தேச வழமைச் சட்டத்தின் பிரகாரம், இங்குள்ளவர்கள் அங்கு சென்று காணி வாங்க முடியாது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்